×

திருப்புவனம் பூமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு களைகட்டியது 14 குழுக்கள் களமிறங்கி காளைகளை அடக்கினர்

திருப்புவனம்: திருப்புவனம் பூமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூரில் உள்ள பூமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் வடமாடு மஞ்சு விரட்டு விழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு பூமாரியம்மன் கோயில் எதிரில் உள்ள திடலில் நேற்று வடமாடு மஞ்சு விரட்டு நடந்தது. இந்த விழாவை காரைக்குடி எம்.எல்ஏ. மாங்குடி துவக்கிவைத்தார். நகர் காங்கிரஸ் தலைவர் நடராஜன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் பழனிவேல்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர், தொழிலதிபர் திருநாவுக்கரசு வெற்றி பெற்ற காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகளை வழங்கினார். சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டஙகளிலிருந்து காளைகள் கொண்டு வரப்பட்டன. ஒரு காளைக்கு/மாடுபிடி வீரர்கள் 9 பேர் கொண்ட குழு வீதம் 14 குழுக்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள் தங்ககாசு, வெள்ளிக்காசு, கட்டில், பீரோ என பரிசு வழங்கப்பட்டது. இப்போட்டியில் 13 பேர் காயமடைந்தனர்.

Tags : Tiruppuvanam Poomariamman temple festival ,Vadamadu Manchu ,
× RELATED திருவாடானை அருகே வடமாடு மஞ்சு விரட்டு